Saturday, December 15, 2007

399. மருத்துவர் ஐயா vs அமைச்சர் - பாகம் II

எதிர்பார்த்தது போலவே, திமுக பாமகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதில் தங்களுக்கு மகிழ்ச்சியே என்று டாக்டர் ஐயா கூறி விட்டார்! 'நாங்கள் திமுகவின் தோழமைக்கட்சி அல்ல, நட்புடன் கருத்து கூறும் எதிர்க்கட்சி மட்டுமே' என்று மருத்துவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி (திமுக அதில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்) அமைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அது போலவே, நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கு தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும், வந்திருந்தாலும் சென்றிருக்க மாட்டோம் என்று மேலும் கூறினார்.

அத்துடன், பத்திரிகையாளர் குழுவை திண்டிவனம் அருகில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்துச் சென்று, ஆவணங்களையும் சாட்சிகளையும் காட்டி, ஆற்காட்டாரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதையும் சுட்டிக் காட்டினார். பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வரும் நிலம், விளைநிலமோ, பொறம்போக்கு நிலமோ அல்ல என்று உறுதிபடக் கூறினார்.

2011 சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அஇஅதிமுக இல்லாத ஒரு கூட்டணிக்கு பாமக தலைமை வகிக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார் !!! OBC இடஒதுக்கீடு மற்றும் AIIMS பிரச்சினைகளில் திமுக தங்களுக்கு தேவையான ஆதரவு அளிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

கடலூரில் மின்நிலையத் திட்டத்திற்கு, ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதில் கூறவில்லை என்பதையும், அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு அத்திட்டத்தில் பங்கு உள்ளது என்பதையும் அமைச்சர் இதுவரை மறுக்கவில்லை என்பதையும் ராமதாஸ் சுட்டிக் காட்டினார்.

இது இப்படி இருக்க, மருத்துவர் பல சமயங்களில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக செயல்பட்டதாக ஆற்காட்டார் குற்றம் சாட்டியுள்ளார். வன்னியர் பல்கலைக்கழகம் குறித்து தான் வைத்த குற்றச்சாட்டின் பேரில் தன் மேல் வழக்கு தொடருமாறு அமைச்சர் மருத்துவர் ஐயாவுக்கு சவால் விடுத்துள்ளார். (முதலில், டாக்டர் ஐயாவின் சவால், இப்ப அமைச்சரின் சவால்! :))

சென்னைக்கு வெளியே, நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவில் பொறம்போக்கு நிலங்களை பாமகவினர் ஆக்ரமிப்பு செய்திருப்பதாகவும், அதனாலேயே திமுகவின் சாட்டிலைட் நகர் திட்டத்தை பாமக எதிர்த்து முடக்கியதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். (இது நடந்து ஓராண்டு கழித்து, அமைச்சர் குற்றம் சாட்டுவது ஆச்சரியமாக உள்ளது !!!)

மேலும், ஒன்றரை கோடி வன்னிய மக்களுக்கு தான் ஒருவரே பிரதிநிதி போல ராமதாஸ் பேசுவது விந்தையாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடரும் .....

நன்றி: டெக்கான் குரோனிகள், இந்தியன் எக்ஸ்பிரஸ்

5 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !!!

said...

மொக்கைப் பதிவுகளாக இந்த தொடர் போய்க்கொண்டிருக்கிறதே? எல்லாரும் பேப்பரில் இதை படித்துவிட்டோம். உமக்குன்னு சிந்தனைகள் ஏதாவது இருந்தால் அதை தொகுத்துப் போடும்.

புரட்சி தமிழன் said...

என்ன பாலா கமெண்டு எதுவும் இல்லைனு டெஸ்டு செய்து பார்க்கிறீர்களா. இன்று சனிகிழமை யாரும் அலுவலகத்தில் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன் அதான் தமிழ் மணம் டல் அடிக்கிறது

enRenRum-anbudan.BALA said...

காண்டு ஆனவன்,

அவர்கள் அறிக்கைகளை தொகுத்து முக்கியமானதை மட்டும் கொடுத்திருக்கிறேன். மற்றபடி, இதில கருத்து சொல்றதாவது, என்ன நக்கல் பண்றீங்களா ? ;-) அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ அதை எடுத்துக்குங்க :)

புரட்சி தமிழன்,
வாங்க சார், இன்னிக்கு கொஞ்சம் டல் தான் அடிக்குது, நீங்க வந்திருக்கீங்களே, அதுவே போதும் :)

said...

அறிக்கை போர் ஓய்ஞ்சிருச்சு போல இருக்கு ......... ரெண்டு நாளா சத்தமே இல்லையே ;))))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails